ஃபோர் வீல் டிரைவ் இயக்கத்தைப் பார்க்கவும்

முதற் பக்கம் குழந்தையின் முதல் சவாரி 4 வீல் டிரைவ் ஆக இருப்பதேன்?

குழந்தை சுயமாக நடக்க மற்றும் பேலன்ஸ் செய்ய ஆரம்பித்ததும், உங்களின் 4 வீல் டிரைவை பயன்படுத்தச் செய்யலாம். குழந்தையானது இந்தத் தயாரிப்பில் உட்கார்ந்திருக்கும்பொழுது, அதன் பாதங்களிரண்டையும் தரையில் ஊன்ற முடியுமானால், உங்கள் குழந்தை மிகச்சிறந்த பலன்களைப் பெறும். 4 வீல் டிரைவ் ஆனது, தனித்துவத்துடன் கூடிய சௌகரியமான வடிவமைப்பை கொண்டுள்ளதால், உங்கள் குழந்தைக்கு இது வெறும் கேளிக்கைப் பொருளாக மட்டுமின்றி, அதன் அத்தியாவசிய வளர்ச்சிக்கு உதவவும் செய்கிறது. இந்தத் தயாரிப்பானது ஒன்று முதல் இரண்டரை வயதுள்ள குழந்தைகளை, களைப்படையச் செய்யாமல், உடல் செயல்பாடுகளை அதிகபட்சமாக பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Multicolored Minjal 4 Wheel Drive Ride On Toy
Minjal 4WD Ride On Toy

4 நிறங்களில் கிடைக்கிறது நீலம் சிகப்பு இளஞ்சிகப்பு பச்சை

Leg Powered Ride on Toy

கால்களால் இயக்கலாம்

4 வீல் டிரைவை திருப்ப கால்களைப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, கைப்பிடியை அல்ல. இதனை குறுகிய கோணத்தில் மட்டுமே திருப்ப முடியும் .

Ride On Toy Safety Stopper

சேஃப்டி ஸ்டாப்பர்ஸ்

சவாரியின் போது தரையில் பெரிய பொருள் ஏதாவதுடன் குழந்தை மோதாமலிருக்க, முன்புறமும் பின்புறமும் சேஃப்டி ஸ்டாப்பர்ஸ் உள்ளன.

Minjal 4WD Motorbike Seating Ride On Toy

மோட்டார்பைக் இருக்கை போன்ற வடிவமைப்பு

குழந்தையாக இதில் சவாரி செய்ய சவுகரியமாக இருப்பதற்காக மோட்டார்பைக் இருக்கை போன்ற வடிவமைப்பு கொண்டுள்ளது. கைப்பிடியானது, குழந்தைக்கு ஆதரவாக இருப்பதற்காக வண்டியின் உடம்புடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது.

மென்மையான ரப்பர் மேற்பூச்சு

வீட்டின் உட்புறங்களின் இதன் நகர்தல் சத்தமெழுப்பாமலிருக்க அல்லது சத்தம் குறைவாயிருக்க, சக்கரங்கள் மென்மையான ரப்பர் மேற்பூச்சை கொண்டுள்ளன. இந்த சக்கரங்கள், தரையின் மேற்பரப்பில், கறை அல்லது கீறலை ஏற்படுத்துவதில்லை. இந்த ரப்பர், சிறு அதிர்வுகளை கிரகித்துக்கொள்வதுடன், தரையில் வழுக்காமலும் இருக்கும்.

சக்கரங்களின் சீரான ஓட்டம்

சக்கரங்களின் சீரான ஓட்டம் –சீராக ஓட்டம் மற்றும் சக்கரங்களின் அச்சிற்கு பாதுகாப்பு ஆகியவற்றிற்காக சக்கரங்கள், ABS பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால் குறைந்த ஆற்றலில் அதிக தூரம் சவாரி செய்யலாம்.

பால் பேரிங் அற்ற வடிவமைப்பு

4 வீல் டிரைவில், பால் பேரிங்குகளின் அழுக்குகளை ஈர்க்கும் தன்மை மற்றும் துருப்பிடிக்கும் தன்மை காரணமாக ஓட்டத்தில் தடையேற்படுத்த முடியுமாதலால் அவை பயன்படுத்தப்படவில்லை.

4 வீல் டிரைவை 360 டிகிரி சுழற்றலாம்

spin 360 4wd minjal ride on toy