4 வீல் டிரைவ்: பிங்க்

'4WD Ride On Toy Pink' '4WD Ride On Toy Pink' '4WD Ride On Toy Pink' '4WD Ride On Toy Pink' '4WD Ride On Toy box' '4WD Ride On Toy box' '4WD Ride On Toy box' '4WD Ride On Toy box' '4WD Ride On Toy For Boy' '4WD Ride On Toy For Girl'

MRP: ரூ. 4499

You Save: ரூ. 449

ரூ. 4050

ஷிப்பிங் இலவசம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில அஞ்சல் குறியீட்டு எண்களில் டெலிவரியின் பொழுது பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது

நிறைய வண்ணங்கள்

Product Price Buy
4 வீல் டிரைவ்: சிகப்பு ரூ. 4050
4 வீல் டிரைவ்: நீலம் ரூ. 4050
4 வீல் டிரைவ்: பச்சை ரூ. 4050

சவுகரியமாக வடிவமைக்கப்பட்ட ஹேண்டில் பார்கள்

இதிலுள்ள வார்க்கப்பட்ட ஹேண்டில் பார்கள், குழந்தையின் பிஞ்சுக் கரங்கள் 4 வீல் டிரைவ்-ஐ உறுதியாக பிடிக்கும் விதத்திலும் அவர்களாகவே அதனைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் உள்ளது. கால்களால் உந்தித்தள்ளும் பொழுது, குழந்தையால் வளைவான ஹேண்டில் பார்கள் மீது தனது அடிவயிறுக்கு ஆதரவாக முன்னோக்கி சாய முடியும். இது சவாரியை சவுகரியமானதாக்குகிறது. உங்கள் குழந்தை நான்கு சக்கரங்களையும் சமமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் வகையில் ஹேண்டில் பார்கள் பொருத்தப்பட்டுள்ளது

தகுந்த உயரம்

உங்களின் குழந்தை, அவர்களாகவே 4 வீல் டிரைவ் மீது சுதந்திரமாக விளையாட ஏதுவாக உள்ளது. குழந்தைகள், தாமாக ஏறவும் மற்றும் இறங்கவும் வசதியாக இந்தத் தயாரிப்பு குறைந்த உயரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக உட்காருவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட இருக்கையைக் கொண்டுள்ளது.

சவுகரியமான இருக்கை

குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதை ஊக்குவிக்க, குழந்தைகளுக்கும், இளஞ்சிறார்களுக்கும் சவுகரியமளிப்பதற்காக பைக்கில் உள்ளது போல வடிவமைக்கப்பட்ட வளைவான இருக்கையைக் கொண்டுள்ளது.

பல திசை பயணம்

ஹேண்டில் பார்கள் நிலையாக பொருத்தப்பட்டிருப்பதால், கால்களின் ஆற்றல் மூலம் பல திசைகளில் பயணிக்க முடியும். இதர சவாரி வண்டிகளைப் போலில்லாமல், my first ride on –ல், முழு வட்டப்பாதை உள்பட அனைத்து திசைகளிலும் சுழலக்கூடிய நான்கு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பானது, உங்கள் குழந்தை, தான் விரும்பும் திசைகளில் தங்குதடையின்றி பயணிப்பதை அனுமதிக்கிறது.

சேஃப்டி ஸ்டாப்பர்

4 வீல் டிரைவ் ஆனது, தலைகீழாக கவிழாமலிருக்கவும், பயணத்தின் பொழுது, தரை மீதிருக்கும் உயரமான பொருட்கள் மீது மோதுவதைத் தவிர்க்கவும் முன்புறமும், பின்புறமும் சேஃப்டி ஸ்டாப்பர்களை கொண்டுள்ளது.

குறுகிய இடங்களுக்கு உகந்தது

மெல்லிய வடிவமைப்பு காரணமாக 4 வீல் டிரைவ்-ஐ குறுகிய இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

சக்கர வடிவமைப்பு

அறிவியல் ரீதியாக, பால் பேரிங்குகளில் இல்லாமலே சீராக சுழலக்கூடிய வகையில் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரையுடன் ஒரு தொடுமுனை மட்டுமே உள்ளதால் குழந்தைகளால் எளிதாக திடீரென்று செலுத்த மற்றும் நிறுத்த முடியும்.

Technical Details

பிராண்டு மிஞ்சல்
தயாரிப்பின் பெயர் 4 வீல் டிரைவ் (4WD)
வயது 1 ஆண்டு 2.5 ஆண்டுகள் (குழந்தை நடக்கத் தொடங்கிய நிலை)
சக்கரத்தின் வகை அகலமான ஒற்றைச் சக்கரம் – ரப்பரால் தயாரிக்கப்பட்டது
மூலப்பொருள் பிளாஸ்டிக்ஸ் (எச்டிபிஈ, ஏபிஎஸ், டிபிஈ)
நிறம் பிங்க்
தயாரிப்பின் அளவுகள் இருக்கை அகலம் 13-18 செமீ x தரையிலிருந்து இருக்கை உயரம் 21 செமீ x நீளம் 44 செமீ
தயாரிப்பின் எடை 1.95 கிலோ (தோராயமாக)
யுபிசி எண் 857455005285
முக்கிய அம்சம் கூடுதல் வழுவழுப்பான சக்கர சுழற்சி
அதிகபட்சமாக தாங்கும் எடை 25 கிலோ
அசெம்பிளி தேவைப்படும் ஆம் (ஹேண்டில்)
பாட்டரிகள் இல்லை
பேக்கிங் அச்சடிக்கப்பட்ட பெட்டி

ஆரம்பக்கட்ட பயிற்சி - my first ride on

உங்கள் குழந்தையானது, எவர் உதவியுமின்றி தனது முதல் சவாரியை சௌகரியமாக மேற்கொள்ள, முதலில் நீங்கள், இத்தயாரிப்பில் குழந்தை உட்கார்ந்திருக்கும்போது அதன் பாதங்களிரண்டும் தரையைத் தொட்டுக்கொண்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் குழந்தையானது, my first ride on –ஐ பயன்படுத்த, அதனால் நடக்க முடிவதுடன், நிற்கும்பொழுது பேலன்ஸ் தவறாமலிருக்கவும் வேண்டும்.

நாள் 1 மற்றும் 2

உங்கள் குழந்தையானது, அதன் my first ride on உடன் முதல் சவாரி செய்யும் போது, சௌகரியமாக உணர அவர்களைப் பிடித்துக்கொள்ளுங்கள். my first ride on-ன் பின்பகுதியை மென்மையாக அசையுங்கள். இதனால் உங்கள் குழந்தையால் சக்கரங்களின் நகர்வை உணர முடியும். உங்கள் குழந்தை சவாரி செய்ய ஆரம்பித்த ஒரு சில சமயங்களில் கீழே விழக்கூடும். அவர்கள் my first ride on-ஐ பயன்படுத்திக்கொள்ள தங்களை பொருத்தமாக்கிக்கொள்வதால், இது முற்றிலும் சகஜமானதே. அவர்கள் அடுத்தடுத்து கீழே விழுவதாக இருந்தால், தொடர்ந்து முயற்சிக்க அவர்களை நிர்பந்திக்க வேண்டாம். ஒரு வார இடைவெளிக்குப் பிறகு, அவர்களை இந்தத் தயாரிப்பில் பேலன்ஸ் செய்ய மீண்டும் முயற்சிக்க ஊக்குவிக்கவும். பாதங்களிரண்டும் எப்பொழுதும் தரையைத் தொடுவதை உறுதிசெய்யவும்.

நாள் 3

உங்கள் குழந்தையானது, அதன் my first ride on மீது உட்கார்வதில் சௌகரியமாக உணர்ந்தால், அதனை மென்மையாக முன்னோக்கித் தள்ளவும். அதிவேகமாகவோ, குலுக்கலுடனோ தள்ளக்கூடாது. இதனால், உங்கள் குழந்தையின் பேலன்ஸ் தவறும்.

நாள் 4

my first ride on-ஐ இப்போது மென்மையாக முன்னும் பின்னும் நகர்த்தவும்.

நாள் 5

மீண்டும், முன்னும் பின்னும் நகர்த்தவும். மற்றும் குழந்தையானது, தனது விருப்பப்படி, my first ride on-ஐ நகர்த்த அனுமதிக்கவும். இது உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், my first ride on-ஐ கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதை அனைத்து திசைகளில் நகர்த்துவதை ஏதுவாக்கவும் செய்யும்.

6 நாட்கள் ஆனது முதல்

உங்கள் குழந்தையின் முன்னேற்றத்தைப் பொருத்து நீங்கள் படிகளை மீண்டும் செய்ய முடியும். பொதுவாக, ஒரு குழந்தை, எவர் உதவியுமின்றி தானாகவே my first ride on-ஐ பயன்படுத்த சுமார் 15 நாட்கள் தேவைப்படும். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது என்பதால், குழந்தையின் தன்னம்பிக்கை வளரும் வரையில் ஆரம்பப் படிகளை மீண்டும் செய்ய வேண்டும்.

உட்புற பயன்பாட்டுக்கு மட்டும் ஏற்றது.

 1.   my first ride on-ஐ வீட்டின் உட்புறத்தின் சமதளமான தரைகளில் பயன்படுத்துவதே பாதுகாப்பான வழியாகும்.

2.   வெளிப்புறத்தில் தரையின் கரடுமுரடான மேற்பரப்பு சக்கரங்களின் ரப்பர் அடுக்கை  சேதப்படுத்தலாம். அதனால், வெளிப்புற பயன்பாடு பரிந்துரைக்கப்படவில்லை.

3.   சாலைகளின் அருகில் பயன்படுத்த வேண்டாம்.

4.   குழந்தையைத் தனியாகவோ மற்றும் கவனிக்காமலோ விட்டுச் செல்ல வேண்டாம்.

5.   மேலிருந்து விழும் அபாயமுள்ள இடங்களில், உதாரணமாக, மாடிப்படிகள், பால்கனி, வெராந்தா, மேடான பகுதிகள், அல்லது நெருப்பின் அருகில் குழந்தை இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.

6.   இதன் இருக்கை மீது நிற்கவோ அல்லது உயரத்திலுள்ள பொருட்களை அடைய, இதனை ஒரு ஸ்டூல் போல பயன்படுத்தவோ வேண்டாம்.

7.   25 கிலோ உடல் எடைக்கும் அதிகமான குழந்தைகளை இந்த தயாரிப்பில் சவாரி செய்ய அனுமதிக்க வேண்டாம்.

8.   my first ride on-ஐ தீச்சுவாலை அருகிலோ, அல்லது நேரடி சூரிய ஒளியிலோ வைக்க கூடாது.

9.   பொருத்த வேண்டிய பாகங்கள் எதனையும் குழந்தைகளிடம் தர வேண்டாம். சிறிய பாகங்கள், குழந்தைகளுக்கு சுவாசத்தடை அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை. பெரியவர்கள்  மட்டுமே இதனைப் பொருத்த வேண்டும்.

10.  இந்தத் தயாரிப்பின் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மூச்சுத்திணறலை ஏற்படுத்தாமலிருக்க குழந்தைகளை அவற்றுடன் விளையாட அனுமதிக்க வேண்டாம்.

11.  இந்தத் தயாரிப்பானது, காலப்போக்கில், தரம் குறையவோ அல்லது சேதமடையவோ கூடும். திருகுகள் இறுக்கமான இருப்பதையும், சக்கரங்கள் இயல்பாக சுழுலுவதையும் அவ்வப்பொழுது சரிபார்க்கவும். ஏதாவது குறைபாடு காணப்பட்டால், தயாரிப்பினை விலக்கிவிடுங்கள்.

12. ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே சவாரி செய்ய அனுமதிக்கவும்.

1. சீரான சவாரிக்கு, ஒழுங்குமுறையுடன் சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது ஆகும்.  my first ride on-ன் சக்கரங்களில் தரையின் மேற்பரப்பிலுள்ள மனித முடிகள் மற்றும் நூல்கள் சிக்கிக்கொள்ளும்.  இவை, அச்சிற்குள் நன்றாக சுற்றுக்கொண்டால், சக்கரங்கள் வேகமாக சுழல முடியாமல் தடைபடும்.

2..முடிகள் அல்லது நூல்களை, உங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலின் துணையுடன், சக்கரங்களை மெதுவாக சுழற்றி, வெளியில் இழுக்கவும். நீங்கள் சாமணத்தையும் (tweezers) பயன்படுத்தலாம்.     

3. சக்கரங்கள், உறுதியான பிடிமானமளிக்கும்  ரப்பரால் செய்யப்படுவதால், அதில் அழுக்குகள் ஒட்டுக்கொள்ளும். அவ்வப்பொழுது மென்மையான ஈரத் துணியால் இந்த அழுக்கை நீக்குங்கள்.

4.சுத்தம் செய்யும்பொழுது, தயவுசெய்து சக்கர அசெம்பிளியை திறக்க முயல வேண்டாம்.  சக்கரத்தை பொருத்துகின்ற நட்டில் உள்ள நைலான் இணைப்பு, மறுபடியும் பொருத்த முடியாதது.

4Wheel Drive Cleaning instructions

இதனை பொருத்துவதற்கு உங்களுக்கு ஒரு ஸ்டார் ஸ்க்ரூ டிரைவர் தேவைப்படும்.

1. ஹேண்டில் பாரின் வளைந்த முனைகள் முன்னோக்கி இருக்கும்படி வைக்கவும்.

2.ஹாண்டிலின் தண்டை, பாடியிலுள்ள ஹோல்டரில் செருகவும்.

3. வலதுபுறமுள்ள அறுங்கோண காடியினுள்  நட்டை வைக்கவும்.

4. மறுமுனையிலிருந்து வாஷர் உடன் போல்ட்டை பாடி வழியாக, அது நட்டுக்குள் நுழையும் வரை செலுத்தவும்.

5. மூன்றும் சரியாக  நேர்படுத்தப்பட்டதும், ஒரு ஸ்க்ரூ டிரைவரை பயன்படுத்தி  முடுக்கவும்.

4Wheel Drive Training

எச்சரிக்கை :

நட்டானது சரிவர பொருத்தப்படாவிட்டால், சிறிது நேரம் கழித்து, இயக்கம் மற்றும் அதிர்வு காரணமாக கைப்பிடியானது தளர்வாகக்கூடும். எனவே, பயன்படுத்துவதற்கு முன்பாக நட்டானது இறுக்கமாக முடுக்கப்பட்டுள்ளதா என ஒவ்வொரு தடவையும் பரிசோதிக்க தவறாதீர்கள்.