உட்புற பயன்பாட்டுக்கு மட்டும் ஏற்றது.
1. my first ride on-ஐ வீட்டின் உட்புறத்தின் சமதளமான தரைகளில் பயன்படுத்துவதே பாதுகாப்பான வழியாகும்.
2. வெளிப்புறத்தில் தரையின் கரடுமுரடான மேற்பரப்பு சக்கரங்களின் ரப்பர் அடுக்கை சேதப்படுத்தலாம். அதனால், வெளிப்புற பயன்பாடு பரிந்துரைக்கப்படவில்லை.
3. சாலைகளின் அருகில் பயன்படுத்த வேண்டாம்.
4. குழந்தையைத் தனியாகவோ மற்றும் கவனிக்காமலோ விட்டுச் செல்ல வேண்டாம்.
5. மேலிருந்து விழும் அபாயமுள்ள இடங்களில், உதாரணமாக, மாடிப்படிகள், பால்கனி, வெராந்தா, மேடான பகுதிகள், அல்லது நெருப்பின் அருகில் குழந்தை இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.
6. இதன் இருக்கை மீது நிற்கவோ அல்லது உயரத்திலுள்ள பொருட்களை அடைய, இதனை ஒரு ஸ்டூல் போல பயன்படுத்தவோ வேண்டாம்.
7. 25 கிலோ உடல் எடைக்கும் அதிகமான குழந்தைகளை இந்த தயாரிப்பில் சவாரி செய்ய அனுமதிக்க வேண்டாம்.
8. my first ride on-ஐ தீச்சுவாலை அருகிலோ, அல்லது நேரடி சூரிய ஒளியிலோ வைக்க கூடாது.
9. பொருத்த வேண்டிய பாகங்கள் எதனையும் குழந்தைகளிடம் தர வேண்டாம். சிறிய பாகங்கள், குழந்தைகளுக்கு சுவாசத்தடை அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை. பெரியவர்கள் மட்டுமே இதனைப் பொருத்த வேண்டும்.
10. இந்தத் தயாரிப்பின் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள், மூச்சுத்திணறலை ஏற்படுத்தாமலிருக்க குழந்தைகளை அவற்றுடன் விளையாட அனுமதிக்க வேண்டாம்.
11. இந்தத் தயாரிப்பானது, காலப்போக்கில், தரம் குறையவோ அல்லது சேதமடையவோ கூடும். திருகுகள் இறுக்கமான இருப்பதையும், சக்கரங்கள் இயல்பாக சுழுலுவதையும் அவ்வப்பொழுது சரிபார்க்கவும். ஏதாவது குறைபாடு காணப்பட்டால், தயாரிப்பினை விலக்கிவிடுங்கள்.
12. ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே சவாரி செய்ய அனுமதிக்கவும்.